-->

Friday, January 24, 2014

சும்மா இருப்பது எப்படி?ஹாய் ஜனங்களே, எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆள காணோம்னு என்ன தேடுணீங்களா? இந்த வலைப்பூவ வாசிக்கறதே மொத்தமா ஒரு நாலைஞ்சு பேரு தான். இதுல இந்த காட்டுபூச்சி பண்ணுற அலப்பறைய பாரேன் அப்படிங்கற உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது. ஓகே, மூடிட்டேன்.

                                             
புது வருஷமும் இரண்டாம் உலக பிரியாணியும்

ரொம்ப நாளா வெட்டியா இருந்தாலும் முழுசா வெட்டியா இருக்கறது தான் நமக்கு புடிக்கும். அதனால புதுப்படம் எதுவுமே பார்க்கல. நேத்து கடைத்தெருப்பக்கம் தெரியாத்தனமா போனேனா.. ஏன் போனேன் அப்புடிங்கறது வேற கதை(அதையும் நான் சொல்லியே ஆகுவேன், பாஸ் கேளுங்களேன், கேளுங்களேன்).


திடீர்னு ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்து தான் ஒரு நேர்முக தேர்வுக்கு வர சொல்லி அமெரிக்கால கூப்புட்டாக.. அப்போ தான் நம்ம கிட்ட ஒழுங்கான சப்பாத்து இருக்கா கைப்பை இருக்கானு எல்லாம் தேடிப்பார்த்தேன். வழக்கம் போல எல்லாமே ஒவ்வொரு பக்கம் பிஞ்சி உசுரா எடுத்துச்சு. வேலைக்கும் நமக்கும் இருக்க ராசி தான் உலக பேமஸ் ஆச்சே. என் நண்பனுங்க எப்போ "தொல்லை பேசி" எடுத்தாலும் கேட்கற ஒரே கேள்வி "இன்னுமா நீ வெட்டியா இருக்க?".. பத்தாததுக்கு "உன்ன பெத்தவங்க ரொம்ப நல்லவங்கடா உனக்கு இந்த வயசுலயும் தண்டச்சோறு போடுறாங்க" இப்படி சில பல பிட்டுங்கள போட்டு கடுப்பேத்துவானுங்க. இந்த நாற வாய்ங்களுக்காகவாவது நாம வேலைக்கு போகனும் அப்படினு ஒரு நல்ல முகூர்த்தத்துல எடுத்த முடிவின் பலன் தான் இந்த நேர்முக தேர்வு அழைப்பு.


அந்த பிஞ்சு போன சாப்பாத்துக்கு பங்ச்சர் ஓட்டலாம்னு போனேனா.. அப்போ காத்து நிக்குற நேரம் கொஞ்சம் ஜலபுல ஜங்ஸ் டிவிடி எதாச்சும் தேடலாம்னு பக்கத்துல இருந்த டிவிடி கடைக்குள்ள நோழைஞ்சேன்.அப்போ தான் சனியன் சகடை நம்ம தோள் மேல ஏறி நின்னு ஒலக மகா காவியங்களான இரண்டாம் உலகம் & பிரியாணிய கை காட்டுனிச்சு, சரி என்னுயிர் தோழன் பாலா இந்த இரண்டு படங்களையும் பார்த்து விட்டு ஆஹா ஓஹோன்னு கொடுத்த பில்டப் என்ன நம்பி வாங்குடா காட்டுபூச்சினு தூண்டுனிச்சு (காட்டுபூச்சி : ரெண்டாம் உலகம் படு மொக்கைனு சொல்றாங்களேடா 
பாலா : அதெல்லாம் செல்வா மேல உள்ள கடுப்பு , ரசனை கெட்டவனுங்க ஒருத்தன் அவன் காதலுக்காக எவ்ளோ தூரம் போவான் அப்படிங்கறது தான் கதை. கிராஃபிக்ஸ் லாம் செம்மையா இருக்கு. நீ பார்க்காம கருத்து சொல்லாத. பார்த்துட்டு சொல்லேன்.
காட்டுபூச்சி : பிரியாணிய எப்படிடா பார்க்க போற. கார்த்தி படம். ஆனாலும் உனக்கு மனதைரியம் ஜாஸ்தி.
பாலா : நான் வெங்கட் பிரபுக்காக பார்க்க போறேன். He will never disappoint me. அதுலயும் "தல" ஓட guest appearance இருக்காம்னு ஊர்ல பேசிக்குறாங்க. அதுக்காக போயே தீருவேன்).மொதல்ல பிரியாணிய மொக்கலாம்னு உட்கார்ந்தேனா.. மொத ஒரு மணித்தியாலமும் கார்த்தி ஃபிகர் மடிப்பது எப்படி, அதுவும் அடுத்தவன் ஃபிகர ஆட்டைய போடுவது எப்படினு எடுத்த பாடத்துலயே ஓடுனிச்சு. எப்படா படத்த்த போடுவீங்கனு உள்மனசு கதருனப்ப நம்மை காக்க வந்த க்ருஷ்ண பரமாத்மா மாதிரி மாண்டி தாக்கர் வந்து நின்னுச்சு. என்னா ஃபிகருடா.... இந்த புள்ளைய ஹன்ஸிகா ஆன்டீக்கு பதிலா  போட்டுருந்தா படம் முழுக்க குளிர்ச்சியா இருந்துருக்குமே. கொஞ்சமா வேகம் எடுத்த படம் அக்கா செண்டிமென்ட் காட்சிகளால மறுபடி படுத்திருச்சு. அதுலயும் என்ன விட்டுட்டு தண்ணி அடிக்க போவியா மச்சி ரேன்ஜ்ல எல்லாரும் கார்ல குந்திக்கிட்டு நண்பன்னா என்ன தெரியுமானு ஆளாளுக்கு விட்ட பன்ச்ல, முடியல மக்கா..


இதுவே இப்படினா இரண்டாம் உலகம் எப்படி இருக்குமோனு ஒரே நாளுல நாம ரொம்ப தான் ரிஸ்க் எடுக்குறோமோனு உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலோடதான் பார்க்க தொடங்குனேன். ஆனா அனுஷ்கா-ஆர்யா (ரம்யா-மது) இந்த உலக காதல் நெஜமா நல்லாவே இருந்துச்சு. அதிலும் என் காதல் தீ பாடல் அருமை. ரெண்டாம் ஒலக காதல்(வர்ணா-மறவன்) மொக்கைத்தனம் அதிகமா லூசுத்தனம் அதிகமான்னு சொல்லமுடியாம பின்னி பிணைஞ்சு ஒரு கலவையா இருந்தது. அதுல புடிச்ச ஒரே விஷயம் வெள்ளைக்காரனுங்க(வேற்றுகிரக வாசிங்க) பேசுன தமிழ். கண்கலங்கிட்டேனப்பூ.. (எல்லாரும் அந்த ராஜாவ குப்ப ராஜா  குப்ப ராஜானு கூப்டாகளே, அது அவரு படிச்சு எடுத்த பட்டமா? #டவுட்டு). படத்தோட ரெண்டாம் பாதி பட்ட பகலுல போற ஹிந்தி ஸீரியல் மாதிரி ஒரே இழுவை. எப்படா படத்த முடிப்பீங்கனு கதறிக்கிட்டு இருக்கும் போதே ஆர்யா மூணாவதா ஒரு உலகத்துக்குள்ள போனாரு. மறுபடியுமா? சேத்தேன்னு அலறிட்டே டீவீ அ நிறுத்திட்டேன். இந்த ரெண்டு படத்தையும் எனக்கு recommend செஞ்ச என் அன்பு நண்பன தான் இப்போ தேடிட்டு இருக்கேன். பழி வாங்கிட்டான் பக்கி.

புது வருசத்துல "வீரம்" தியேட்டர்க்கே போய் ரகளையா விசில் அடிச்சு படம் பார்த்திருந்தாலும் அத பத்தி எழுதாததுக்கு ஒரே காரணம் காட்டுபூச்சி ஒரு தீவிரமான "தல" பக்தன் என்பது தான். அப்புறம் காட்டுபூச்சி நடுநிலமை தவறிட்டான் அப்டீன்னு சிலம்போட ஓடி வாரவங்களுக்கு பஞ்சாயத்து பண்ண என்னால ஆகாது.
புதுசா ஒரு தொடர்கதை

இப்போ உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி. தெனமும் இரவானதும் தண்ணி அடிச்ச மாதிரி என் நண்பர்களை ஒரே கேள்விய திரும்ப திரும்ப கேட்டு அவங்களை டார்ச்சர் பன்னுனதன் விளைவு.. "மச்சி நீ வெட்டியாவே இருக்கதால தான் இப்படிலாம் கேள்வி கேட்குற. எதாச்சும் உருப்படியா எழுதாப்பாரு(எங்கள விட்டுரு..) இப்படி என்ன உசுப்பேத்துனதன் விளைவு...
நான் புதுசா ஒரு தொடர்கதை(?) எழுதலாம்னு முடிவெடுத்து இருக்கேன். அஜால் குஜாலான ஒரு அமானுஷ்ய கதை. நல்லா இருக்க இல்லையானு தொடர்ந்து படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. அதுக்குள்ள எனக்கு வேலை கிடைச்சா இந்த கதை பரணுக்குள்ள போடப்படும். இந்த நல்ல விஷயம் நடக்கனும்கறதுக்காகவாவது எனக்கு சீக்கிரமா ஒரு வேலை கிடைக்கனும்னு pray பண்ணுங்க மக்களே. 


அப்புறம் இந்த தலைப்புக்கும் நா எழுதுன எதுக்குமே சம்பந்தமே இல்லைனு நெனைச்சீங்கனா ஸாரி பாஸ் , நான் ரொம்ப நாள் முன்னாடி எழுதுன பதிவுல(வேலை தேடும் படலமும் அனிதாவின் காதல்களும்) சொன்ன மாதிரி இந்த பதிவ எழுதி முடிச்சிட்டேன். அடிக்க கல்லு தேடாதீங்க. நான் ஒடிட்டேன் அப்போவே.கொசுறு:


நாம எழுதி(?) வேற ரொம்ப நாள் ஆச்சா, இவ்ளோ நாளா எப்படி தமிழில் "தட்டச்சு" செய்தேன் என்பதும் மறந்தே போச்சு. ப்லோக் இல் இருக்குற ஆனாவ (அ) அமுக்கி விட்டு என்னென்னவோ செய்ஞ்சு பார்த்தேன். ஒன்னும் வேலைக்கு ஆகல. கூகுள் ஆண்டவரிடம் டைப்பீ கேட்ட போது யாஹூ தெய்வமே கைகொடுத்தது. அப்போ இவ்ளோ நாள் வேலை செய்ஞ்ச கூகுள் மென்பொருள் எங்க போச்சு? கெணற தான் லவுட்டுறீங்க, கூகுள்கிட்டயுமாடா உங்க நாற வேல?