-->

Tuesday, July 12, 2011

நயன்தாரா இளைத்தது எப்படி?

இப்படி ஒரு அறிவு பூர்வமான பதிவை எழுதவேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆசை. நாங்களும் அறிவார்த்தமா எழுதுவோமுல்ல..அப்போ
இப்போ 
செம்மை கட்டை என்று கூறும்போது உங்களுக்கு யாரை ஞாபகத்துக்கு வரும்? பக்கத்து வீட்டு ரமணி ஆண்டியும் நயன்தாராவும் தான். முன்ன லாம் ட்ரம்முக்கு சேலைய சுத்தி விட்ட மாதிரி தொப்பையோட மரத்த சுத்தி பாட்டு பாடும் எங்க நயன்தாரா.ஆனா இப்போ செம்மை கட்டை அது. 
பொதுவாவே தமிழ் சினிமாவுல என்ட்ரி குடுக்கும்போது சிறுத்த குட்டிங்களா இருக்குற நடிகைங்க எல்லாமே கொஞ்சம் காலம் போனதுமே பெருத்த குட்டிங்களா ஆகுரதுதான் வழக்கம். அதோட சினிமா உலகம் அவங்கள புல்டோசர் வைச்சு குண்டுக்கட்டா தூக்கி வெளிய போட்டுரும். 


ஆனா நயன்தாரா மட்டும் தான் ஷகீலா ஆண்டி சைஸ்ல வந்து இப்போ ஜில் ஜில் ஜிகிர் தண்டாவா ஸ்லிம் பிகர் ஆகிருக்காங்க. 


நான் என்ன பெருத்த குட்டியா?

தமிழ் ரசிகர்களுக்கு எப்போவுமே குஷ்பூ, ஜோதிகா, ரம்பான்னு நல்ல கொழுக் மொழுக்குன்னு ஓவர் சைஸ்ல இருக்கற நடிகைங்கள தான் புடிக்கும்.

ஆனாலும் எவ்வளவு அழகா இருந்தாலும் சீனியர் நடிகருங்களுக்கு ஜோடிபோட்டதால நயனை ஆன்ட்டினு கொஞ்ச காலம் ஒதுக்கியே வைச்சுருந்தாங்க. அவங்க ஸ்லிம் ஆகுனதுக்கப்புறம் தான் இளவட்டங்கள் எல்லாம் நயனுக்கு கோயில் கட்டி கும்புட ஆரம்பிச்சாங்க. 
என்ன அழகு, என்ன பிகரு, என்ன சிரிப்பு, என்ன நடிப்புன்னு எல்லா விதமான ரசிகர்கள கவர்ந்தாங்க. முறைச்சாலும் சிரிச்சாலும் சூப்பர் தான்..கண்கள் மலர்ந்து சிரிக்குற அழகே அழகு(ஜொள்ளு.. ஸ்டாப்பு). 

ஆனா அவங்க ஆயில் மேக்-அப்புலயும் எல்லா படத்துலயும் ஒரே மாதிரி தலையலங்காரத்துலயும்( அதாம்பா ஹேர் ஸ்டைல்) வரும்போது தான் கடுப்பா இருக்கு. நயன்தாரா பாட்டு போகும்போதெல்லாம் "இந்த பொண்ணு ஏன் எப்போ பாரு பாம்பு படம் எடுத்த மாதிரி தலை சீவுது" என்று அடிக்கடி எங்கம்மா கேட்பாங்க. அது நிஜம் தான். யாருப்பா நயன்தாரா அக்காவுக்கு(அக்காவா?...) தலை வாரி விடறது, நாக பாம்பு டான்ஸ் ஆடுற மாதிரி? 
கண்றாவி.. நா ஹேர் ஸ்டைல் ல சொன்னேன்.


என்னதான் இருந்தாலும் செல்லமே செல்லமேனு தொடை தெரிய விஷால் கூடவும் ஜல்சானு விஜய் கூடவும் கெட்ட ஆட்டம் போடுற நயன விட ஒரு வார்த்தை பேச ஒரு நிமிஷம்னு மங்களகரமா ஓடி வந்த நயன்ன தான் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு. 

இனிமே அவங்க படத்துல நடிக்கமாட்டாங்க அப்புடிங்கறது எங்கள மாதிரி ரசிகர்களுக்கு துக்க செய்தி தான். சிம்ரன் போகும்போது எங்களை காக்க நயன் வந்தாங்க. நயன் போகும்போது யாரு வரப்போறா? அந்த தேவதைய சீக்கிரம் எங்க கண்ணுல காட்டு சாமி....(அதுக்கு தான் ஹன்சி குட்டிய அனுப்பிருக்கேன் பக்தர்களே)========================================================================

யோவ், தலைப்புக்கும் நீ இவ்ளோ நேரம் போட்ட மொக்கைக்கும் என்னைய்யா சம்பந்தம்? கடைசி வரைக்கும் நயன்தாரா இளைத்தது எப்படின்னு சொல்லவே இல்லையேனு கேட்குறீங்களா? என்கிட்ட்ட கேட்டா, எனக்கு எப்புடிங்க தெரியும்? சிம்பு அல்லது பிரபுதேவா கிட்ட போய் கேளுங்கப்பு...

No comments:

Post a Comment