-->

Tuesday, July 12, 2011

நயன்தாரா இளைத்தது எப்படி?

இப்படி ஒரு அறிவு பூர்வமான பதிவை எழுதவேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆசை. நாங்களும் அறிவார்த்தமா எழுதுவோமுல்ல..அப்போ
இப்போ 
செம்மை கட்டை என்று கூறும்போது உங்களுக்கு யாரை ஞாபகத்துக்கு வரும்? பக்கத்து வீட்டு ரமணி ஆண்டியும் நயன்தாராவும் தான். முன்ன லாம் ட்ரம்முக்கு சேலைய சுத்தி விட்ட மாதிரி தொப்பையோட மரத்த சுத்தி பாட்டு பாடும் எங்க நயன்தாரா.ஆனா இப்போ செம்மை கட்டை அது. 
பொதுவாவே தமிழ் சினிமாவுல என்ட்ரி குடுக்கும்போது சிறுத்த குட்டிங்களா இருக்குற நடிகைங்க எல்லாமே கொஞ்சம் காலம் போனதுமே பெருத்த குட்டிங்களா ஆகுரதுதான் வழக்கம். அதோட சினிமா உலகம் அவங்கள புல்டோசர் வைச்சு குண்டுக்கட்டா தூக்கி வெளிய போட்டுரும். 


ஆனா நயன்தாரா மட்டும் தான் ஷகீலா ஆண்டி சைஸ்ல வந்து இப்போ ஜில் ஜில் ஜிகிர் தண்டாவா ஸ்லிம் பிகர் ஆகிருக்காங்க. 


நான் என்ன பெருத்த குட்டியா?

தமிழ் ரசிகர்களுக்கு எப்போவுமே குஷ்பூ, ஜோதிகா, ரம்பான்னு நல்ல கொழுக் மொழுக்குன்னு ஓவர் சைஸ்ல இருக்கற நடிகைங்கள தான் புடிக்கும்.

ஆனாலும் எவ்வளவு அழகா இருந்தாலும் சீனியர் நடிகருங்களுக்கு ஜோடிபோட்டதால நயனை ஆன்ட்டினு கொஞ்ச காலம் ஒதுக்கியே வைச்சுருந்தாங்க. அவங்க ஸ்லிம் ஆகுனதுக்கப்புறம் தான் இளவட்டங்கள் எல்லாம் நயனுக்கு கோயில் கட்டி கும்புட ஆரம்பிச்சாங்க. 
என்ன அழகு, என்ன பிகரு, என்ன சிரிப்பு, என்ன நடிப்புன்னு எல்லா விதமான ரசிகர்கள கவர்ந்தாங்க. முறைச்சாலும் சிரிச்சாலும் சூப்பர் தான்..கண்கள் மலர்ந்து சிரிக்குற அழகே அழகு(ஜொள்ளு.. ஸ்டாப்பு). 

ஆனா அவங்க ஆயில் மேக்-அப்புலயும் எல்லா படத்துலயும் ஒரே மாதிரி தலையலங்காரத்துலயும்( அதாம்பா ஹேர் ஸ்டைல்) வரும்போது தான் கடுப்பா இருக்கு. நயன்தாரா பாட்டு போகும்போதெல்லாம் "இந்த பொண்ணு ஏன் எப்போ பாரு பாம்பு படம் எடுத்த மாதிரி தலை சீவுது" என்று அடிக்கடி எங்கம்மா கேட்பாங்க. அது நிஜம் தான். யாருப்பா நயன்தாரா அக்காவுக்கு(அக்காவா?...) தலை வாரி விடறது, நாக பாம்பு டான்ஸ் ஆடுற மாதிரி? 
கண்றாவி.. நா ஹேர் ஸ்டைல் ல சொன்னேன்.


என்னதான் இருந்தாலும் செல்லமே செல்லமேனு தொடை தெரிய விஷால் கூடவும் ஜல்சானு விஜய் கூடவும் கெட்ட ஆட்டம் போடுற நயன விட ஒரு வார்த்தை பேச ஒரு நிமிஷம்னு மங்களகரமா ஓடி வந்த நயன்ன தான் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு. 

இனிமே அவங்க படத்துல நடிக்கமாட்டாங்க அப்புடிங்கறது எங்கள மாதிரி ரசிகர்களுக்கு துக்க செய்தி தான். சிம்ரன் போகும்போது எங்களை காக்க நயன் வந்தாங்க. நயன் போகும்போது யாரு வரப்போறா? அந்த தேவதைய சீக்கிரம் எங்க கண்ணுல காட்டு சாமி....(அதுக்கு தான் ஹன்சி குட்டிய அனுப்பிருக்கேன் பக்தர்களே)========================================================================

யோவ், தலைப்புக்கும் நீ இவ்ளோ நேரம் போட்ட மொக்கைக்கும் என்னைய்யா சம்பந்தம்? கடைசி வரைக்கும் நயன்தாரா இளைத்தது எப்படின்னு சொல்லவே இல்லையேனு கேட்குறீங்களா? என்கிட்ட்ட கேட்டா, எனக்கு எப்புடிங்க தெரியும்? சிம்பு அல்லது பிரபுதேவா கிட்ட போய் கேளுங்கப்பு...

Saturday, July 9, 2011

ஓத்தால கடவுளுக்கு காட்டுபூச்சி எழுதுற கடுதாசி..

(கடவுள் மேல மரியாதை இருக்க கம்முனாட்டிங்க எல்லாம் ஓடி போயிருங்க. அப்புறம் இந்த மாதிரிலாம் காட்டுபூச்சி எழுதுதேன்னு complaint பண்ணகூடாது)
ஓத்தால கடவுளுக்கு,

யோவ், ரொம்ப நாளாவே உனக்கு ஒரு கடுதாசி எழுதி போடணும்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். இன்னிக்கு தான் நேரம் கெடைச்சுது.

நான் ஒன்னும் உலக பிரச்சினைய பத்தியெல்லாம் கேட்டு என் இப்படியெல்லாம் நடக்குது, நீ என்ன செரைச்சுகிட்டா இருக்க அங்கேன்னு கேட்க இந்த கடுதாசி எழுதல. அப்புடி நா கேட்டு நீ இதயம் உடைஞ்சு போய் (அதாம்பா Heart Broken) தண்ணிய அடிச்சுட்டு குப்புற கவுந்துட்டா இங்க உள்ள நாதாரிப்பய எல்லாம் என்னால தான் ஊர்ல மழை பெய்ய மாட்டேங்குதுன்னு காண்டாகி என்ன வைச்சு கும்மிருவானுங்க. பத்தாததுக்கு இந்த பதிவர்களெல்லாம் "காட்டுபூச்சி எழுதுன கடுதாசியும் காண்டாகுன கடவுளும்" னு பதிவைப்போட்டு என்ன கிழி கிழி ன்னு கிழிப்பங்க.தேவையா இதெல்லாம் எனக்கு?

அப்புறம் என்ன ......... க்கு எனக்கு கடுதாசி போடுற, நான் நல்லா இருக்கியானு தெரிஞ்சுக்கவான்னு நீ கேட்கலாம். நீ நல்ல இருக்கியா இல்லையாங்கறத பத்தியெல்லாம் எனக்கு ஒரு மயித்து அளவுக்கு கூட அக்கறை இல்ல. என்ன பத்தியும் கேட்டு தெரிஞ்சுக்க உனக்கு இஷ்டம் இருக்காது. அப்டி கொஞ்சமாவது இருந்தா உன்னோட மூணாவது கண்ணை வைச்சு தேடி தெரிஞ்சுக்க. முக்காலமும் தெரியுமாம்ல உனக்கு. 

இங்க வடிவேலு படம் எதுக்கு?
அப்புடி தெரியலேன்னா நானே சொல்றேன். நான் நல்லாவே இல்லைய்யா. நல்லாவே இல்ல. முன்ன லாம் உன்கிட்ட தான் பினாத்திக்கிட்டு இருப்பேன் ஏன்டா என்னை இப்புடி சோதிக்குறன்னு. கிட்ட தட்ட ஐஞ்சு வருஷம், என்னை வைச்சு காமெடி பண்ணுன. பொறுத்துகிட்டேன். 


இந்த மேட்டர் ல எல்லாம் பேதமே இல்ல. சீட் கெடைக்காத வேட்பாளன் எல்லா கட்சி வாசல்லயும் போய் எவனாவது ஒருத்தன் சீட்ட குடுத்துர மாட்டானா னு நிக்கற மாதிரி எல்லா மத கோயில், சர்ச்சு, பள்ளிவாசல்லையும் போய் நின்னுருக்கேன், உன்கிட்ட சொல்லி என் கவலைய தீர்த்துக்க தான், பின்ன என்ன பிரசாதம் திங்கவா ..ங்கொய்யா? 

ஆனா கடைசி வரைக்கும் நீ தலைய மட்டும் ஆட்டிக்கிட்டு கேட்டுகிட்டு தான் இருந்த. வேற ஒரு ஆணியையும் புடுங்கல. நான் ஒன்னும் சும்மாவே உட்கார்ந்துகிட்டு எனக்கு அத குடு, இத குடுன்னு கேட்கல. நான் கஷ்டப்பட்டு பண்ணுறத, நீ பாட்டுக்கும் எதையாவது செய்ஞ்சு கெடுத்துறாத அப்புடீன்னு தான் உன்கிட்ட கேட்டேன்.

ஆனா நீ என்னோட எல்லா முயற்சிக்கும் வைச்ச ஆப்பு. சின்ன ஆப்பு இல்ல புடுங்கி போட்டு போறதுக்கு. பெரிய புல்டோசர் சைஸ் ல வைச்ச. பத்தாததுக்கு நீ வைச்ச ஆப்ப கவனிக்காம நா போய் அது மேலே உட்கார்ந்து பின்னாடி வேற புண்ணாகி போச்சு. பாருய்யா பாரு.. நல்லா பாரு...

பாருய்யா பாரு.. நல்லா பாரு...


இதுக்கு மேலயும் நா அப்பு வாங்க (பின்னாடி புண்ணாக்கிக்க) ரெடியா இல்ல. So நான் உன்ன வெலக்கி வைக்கறேன். I mean உன்ன divorce பண்ணறேன். இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இனி நீ என் வாழ்க்கைல தலையிடாத. இனி நா வாங்குற ஆப்புக்கேல்லாம் நா மட்டுமே காரணம். இதுக்காக நீ என்கிட்டே ஜீவனாம்சம் அது இதுன்னு கேட்ட னு வைச்சுக்கோ, உங்காத்தா கிட்ட நீ குடிச்ச பால் எல்லாம் ரெத்தமா வெளிய வந்துரும். ஓடி போயிரு. 

இப்படிக்கு 
ஆப்பு வாங்கி வாங்கியே கடுப்பான "காட்டுபூச்சி"


பி.கு: இதற்கும் வடிவேலுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சும்மா லுலுலாய்க்கு அவர் படம் சேர்க்கப்பட்டது. மெய்யாலுமே...

=======================================================================
நன்றி : ஓத்தால என்ற வார்த்தையை எனக்கு அறிமுகப்படுத்திய பதிவாளர் ஜாக்கி சேகருக்கு


தமிழில் தட்டச்சு செய்ய..

கடந்த சில நாட்களாக என் வலைத்தளத்தில் இருந்த தமிழ் மொழி பெயர்ப்பு தொழில் நுட்ப உதவியைக் காணவில்லை. தேடிப்பார்த்த பொது கூகுள் வழங்கும் வேறொரு மென்பொருளே காணக்கிடைத்தது. கூகுள் மென்பொருளான Google Transliteration IME ஐ தரவிறக்கம் செய்யுங்கள். மறக்காமல் மொழிபெயர்க்கும் மொழியாக தமிழை தெரிவு செய்யுங்கள்.
http://www.google.com/ime/transliteration/


கூகுள் தளத்திலேயே மொழிபெயர்க்க.
http://www.google.com/transliterate/indic/Tamil