-->

Saturday, January 29, 2011

இந்த வார dialogue..

சும்மா தமாசுக்கு.. கோச்சுக்காதிங்க.. No offence.. 












Friday, January 28, 2011

Sirutthai - Movie Review


எல்லாருக்கும் காட்டு பூச்சியின் வணக்கம்.. ரகளையா ஒரு Review. சிரிச்சுகிட்டே படிங்க.. ரொம்ப சிந்திக்காதீங்க..

கார்த்தியோட படம்னா எப்பொவுமே ஜாலியா இருக்கும். இதுவும் அதே ரகம்.

கதை என்னன்னா ராக்கெட் ராஜா ராக்கெட் ராஜா னு ஒரு திருடன்(கார்த்தி). அவனுக்கு காட்டு பூச்சி னு ஒரு படா தோஸ்து(சந்தானம்). ரெண்டு பேரும் சுவாமி சிலை ல இருந்து ஏவிஎம் உருண்டை வரைக்கும் பாரபட்சமே பார்க்காம லவுட்டிட்டு(சுட்டுட்டு - திருடிட்டு) இருக்காங்க. ஒரு ஷாப்பிங் மால் ல வைச்சு ராக்கெட் ராஜா ஒரு ஹார்ட் பேஷன்ட் கு குடுக்கற treatment அ பார்த்து அவர் மேல தமன்னாவுக்கு ஒரு இது உண்டாகுது(அதாங்க லவ்வு)



அதுக்கப்புறம் ஒரு சேட்டு கல்யாணத்துல மறுபடி ராக்கெட் ராஜா தமன்னாவ சந்திச்சு ரெண்டு பேரும் காதலிக்குறாங்க. இன்னொருபக்கம் ரத்னவேல் பாண்டியன் னு இன்னொரு கார்த்தி(டபுள் அக்டிங்) secret அ நெறைய murder பண்ணுறாரு.இதுக்கிடைல ஒரு குழந்தை எதிபாராத விதமா ராக்கெட் ராஜா கைல கிடைக்குது. அவர அப்பா நும் கூப்புடுது. நெறைய டுவிஸ்ட் க்கு அப்புறமா ரத்னவேல் பாண்டியன் ஓட flash back. அவர் ஒரு போலிஸ் அதிகாரிங்கறதும் அவருக்கு ஆந்திராவுல நெறைய எதிரிகள் இருக்காங்க அப்டிங்கறதும் தெரிய வருது.

இடையில இந்த எதிரிகளால ஒரு கார்த்தி கொல்லப்படுறதும் மத்த கார்த்தி அந்த எதிரிகல எப்படி பழி வாங்கி ஜெயிக்கறார் அப்டிங்கறது தான் மீதிக்கதை.

ஒரே ரகளையும் ரவுசுமா படம் முழுக்க கார்த்தி.அமிஞ்சிக்கரை மாமிங்களுக்கு அரை மொட்டை போடுறதும் பங்கு பணத்த காட்டு பூச்சியோட பங்கு போடறதும் குப்பத்து ஆண்டீஸ் ஓட சண்டை போடுறதும் தமன்னாவ பார்த்து வெட்கப்படுறதும் அவர் இடுப்ப புடிச்சிட்டு நெளியரதுமா கார்த்தி so sweet. அதே மாதிரி ஒரு போலீஸ் அதிகாரியோட கம்பீரத்தோட மீசைய முருக்கறதும் எதிரிங்கள பந்தாடுறதும் சபாஷ் போட வைச்சுருக்கார்.

தமன்னா அழகுப்பா(இந்த பொண்ணு எந்த சோப்பு போட்டு குளிக்குது? இம்புட்டு வெள்ளையா அழகா இருக்குது. இந்த காட்டு பூச்சிக்கும் அந்த சோப்பு ரெண்டு பார்சல்.....!).கார்த்தி , தமன்னா ஜோடி பொருத்தம் சூப்பர்..



படத்தோட highlight சந்தானம். அவரு வர்ற ஒவ்வொரு சீன் லேயும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தான்.சந்தானத்துக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு.அந்த ஆந்திர வில்லன்னுங்கள பார்த்தாலே பயமா இருக்கு. படம் பார்குறப்போ தெரியாம ஒரு தெலுங்கு டப்பிங் படத்துக்கு வந்துட்டோமோ னு தோணுது.

Director சிவா பக்கா commercial படம் ஒன்னு குடுத்துருக்கார். ஆனா comedy அதிகமாகி கிளைமாக்ஸ் ஓட seriousness அ குறைச்சுடுச்சோ னு தோணுது. Music வித்யாசாகர், நா ரொம்ப ரொம்ப song , செல்லமே song நல்லா இருக்கு. editing V.T.விஜயன் . ரத்த களரியா வர்ற சில காட்சிகளுக்கு கொஞ்சம் கத்திரி போட்டுருக்கலாம்.

மொத்தத்துல சிறுத்தை காமெடி மிருகம்.

Rating : 3.5/5