-->

Wednesday, August 3, 2011

வேலை தேடும் படலமும் அனிதாவின் காதல்களும்.


ஆடிக்கு ஒண்ணு அமாவாசைக்கு ஒண்ணுனு எழுதுனாலும், உருப்படியா(?) ரெண்டு மூணு பதிவு எழுதிட்டு இருந்த என்னையும் கேடுத்துட்டாங்களே (அய்யய்யோ இது அந்த 'கெடுத்து' இல்ல) இந்தப் பதிவருங்க. என்ன எழுதுனாலும் கடைல கூட்டத்த காணோம்.நானும் இப்போ வெட்டியா பதிவு போடலாம்னு இருக்கேன்(என்ன தான் ஒட்டக பால்ல டீ போட்டாலும், ருசியா - சரக்கு இருந்தா தானே கூட்டம் வருமுன்னு நீங்க சொல்றது எனக்கும் கேட்குதுங்க). 

இது நம்ம கடை இல்ல.


வேலை வெட்டி இல்லாத நேரத்துல என்ன பண்றது? நமக்கும் பொழுது போகணுமுல்ல. அதான் சும்மா பதிவுங்கர பேருல பத்து பேர் வைத்தெரிச்சல கொட்டிகிட்டா தானா போயிரும் பொழுது. அதான் இந்த ஐடியா. 

நா ஒன்னும் புதுசா வேட்டியாகுன ஆபிசர் இல்லீங்கோ. இப்போ ஒரு ஆறு மாசம் ஆகுது கொழுப்பெடுத்து போய் வேலைய விட்டு. இந்த ஆறு மாசமா வீட்ல சும்மா பழைய டிவிடி லாம் பார்த்து பார்த்து கண்ணு பூத்து போயிருச்ச்சு. என்ன பண்ணுரதுன்னே தெரியல.

யாரவது "வெட்டி பொழுதை வெற்றியாக மாற்றுவது எப்படி"ன்னு பதிவப் போட்டு நமக்கு கொஞ்சம் யோசனை சொல்லுங்க, இல்லன்னா  "சும்மா இருப்பது எப்படி"ன்னு நா ஒரு பதிவ போட்டு உங்கள எல்லாம் காண்டாக்கிருவேன்.

நான் படிச்சு முடிஞ்சு(வெறும் பள்ளிக்கூட படிப்பு மட்டும் தான்) இப்போ கிட்ட தட்ட ஏழு வருஷம் ஆகுது. ஆனா மொத்தமா ஆறு உத்தியோகம் பார்த்துட்டேன் இந்த ஏழு வருஷத்துல. சில இடங்களுல இருந்து விட்டா போதும்னு நானா ஓடி வந்துருக்கேன். சில இடத்துல அவனுங்களா மண்டைல ஒரு தட்டு தட்டி கழுத்துல கை வைச்சு வெளிய விரட்டி விட்டுருக்காங்க. இப்புடி ஒவ்வொரு வருசமும் ஆறு மாசம் வேலை ஆறு மாசம் வெட்டி னு என் வாழ்க்கை போயிட்டு இருக்கு. எனக்கும் வேலைக்கும் அப்புடி ஒரு ராசி. கடைசியா வேலை பாத்த இடத்துல முறுக்கி கிட்டு வெளிய வந்துட்டு இப்போ மறுபடியும் வேலை தேடும் படலம் ஆரம்பமாகிருச்சு. 


போற இடமெல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா நம்மள தான் ஒரு பய புள்ளையா மதிச்சு வேலை குடுக்க மாட்டேனுறாங்க. நாம அடிக்கடி ஒவ்வொரு வேலையில இருந்தும் வேற வேலைக்கு தாவுற வேகத்த பார்த்து மெரண்டுட்டானுங்க போல. கடைசியா போன வாரம் ஒரு பிரபல ஐடி கம்பெனில நேர்முக தேர்வுக்கு கூப்புட்டாகோ... அங்க தான் ஆரம்பிச்சுது சனி. 

பயபுள்ள, நாம வெட்டியா இருக்கத சாக்கா வைச்சு அவனுங்களுக்கு பொழுது போகாதப்போ எல்லாம் நம்மள கூப்புட்டு நேர்முகத் தேர்வுன்னு இம்சை பண்ண ஆரம்பிச்சானுங்க. ஒரு என்டரன்ஸ் எக்ஸாம், ரெண்டு நேர்முக அரட்டை னு நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு. 

அப்புறமா ரெண்டு பேரு எல்லாத்துலயும் ஒரே அளவு மதிப்பெண் எடுத்து இருக்குறதால வடிகட்டி கடைசியா ஒருத்தருக்கு தான் வேலை குடுக்க முடியுமுன்னு கடைசி நேர்முகத்தேர்வுன்னு கூப்புட்டானுங்க. 


நானும் நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு இவ்வளவு தூரம் கூப்புடுறாங்கலேன்னு கெளம்பி போனேன். எங்க ஆத்தாவும் "சென்று வா மனோகரா, வென்று வா" ன்னு வீரத்திலகம் லாம் பூசி அனுப்பிச்சு. 

அங்க போனா புள்ள புடிக்கிங்கலாட்டம் ரெண்டு பேர் உட்கார்ந்து இருக்கானுங்க நம்மள பேட்டி எடுக்க, மன்னிக்கணும் தேர்வு செய்ய. ஒரு கேள்விய கேட்டு அதுக்கு பதில் சொன்னா இது பத்தாது இன்னும் உங்க கிட்ட எதிர் பார்க்கறேன் டீடைல்லுன்னு சொல்லுறானுங்க. நல்லா கேட்குறாங்கையா டீடைல்லுன்னு நாம நீட்டி மொழங்கி பதில் சொன்னா ஆமா , இல்லை இப்புடி சொன்னா போதும்னு அலுத்துக்குறாங்க கொட்டாவி விட்டுக்குட்டே. 

கிட்ட தட்ட ஒரு மணி நேரம். சுத்தி சுத்தி கேவி கேட்டு அவனுங்களே டயர்டு ஆகிட்டானுங்கனா பதில் சொன்ன நம்ம நெலமை எப்புடி ஆகிருக்கும்? போங்கடா வெண்ணைங்களான்னு ஓடியே வந்துட்டேன்.  அனிதாவின் காதல்களும் சுஜாதாவும்சும்மா இருக்கிற நேரத்துல சில மின்னூல்கள பதிவிறக்கம் செஞ்சு வாசிக்கற பழக்கம் வந்துருக்கு இப்போ(காசு குடுத்து புத்தகம் வாங்குற அளவுக்கு வசதியில்லீங்கோ). அப்போ தான் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் அனிதாவின் காதல்கள் புத்தகம் கிடைச்சுது. 

இதுக்கு முன்னாடியே இந்த நாவலை ஒரு வாராந்த சஞ்சிகையில் வாசிச்சு இருந்தாலும் சில அத்தியாயங்கள தவற விட்ட காரணத்தால், சுஜாதாவின் பரம விசிறி என்பதாலும் மறுபடி பதிவிறக்கம் செய்ஞ்சு வாசிச்சேன். 

வாசிச்சு முடிச்சப்போ இந்த மாதிரி ஒரு எழுத்தாளர நாம இழந்துட்டோமேன்னு அவ்வளவு வருத்தமா இருந்துச்சு. என்னமா எழுதியிருக்காருய்யா இந்த மனுஷன். மனசுக்கு பிடிக்காத திருமணமானாலும் கடைசியில் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு முடிவெடுக்கற சராசரி தமிழ்ப்பெண்ணை பற்றிய கதைன்னாலும் அதை எழுதுன விதம் அபாரம். 

எந்த ஒரு தெளிவான முடிவையும் எடுக்க முடியாமல் பிறரைச் சார்ந்தே இருந்து அவர்கள் எடுக்கும் முடிவை ஏற்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் தடுமாறும் கதா நாயகி அனிதா, இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும், காதல் உள்பட பணத்தால் வாங்கி விட முடியும் என்ற திமிருடன் மிகபெரும் பணக்கார கதாநாயகன் வைரு என்கிற வைரவன், எட்டு வருடமாக ஒரு பெண்ணை மனதிலேயே காதலித்து அவளுக்கு வேறொருவருடன் திருமணம் ஆனபின்பும் காதலிக்கும், அவளுக்கு முதல் கணவனுடன் குழந்தை பிறந்தால் கூட காதலியின் குழந்தையாக ஏற்றுக்கொண்டு அதற்கு நர்சரியில் அட்மிஷன் வாங்க ஏற்பாடு செய்யும் சீதாராமன், குதூகலமான கூடவே சுயநலம் நிரம்பிய நண்பி மது, நடுத்தர குடும்பத்து பிராமிண் பெற்றோர், இவர்களைச்சுற்றி சுழலும் கதை.ஒரு பெண்ணின் திருமணத்துக்காக அவளின் குடும்பம் குதூகலமாக தயாராகும் விதம், ஒரு குழப்ப மனநிலை பெண், அவளின் ஆசைகள்,தடுமாற்றங்கள், அவள் எதையும் முடிவு செய்யாமலே அவளை கடந்து போகும் விதி, மதிப்பான பெரும் பணக்கார வீட்டு பெண்மணியின் வாயில் வீசும் விஸ்கி வாசம், பணமும் பவிசும் இருக்கும் வரை கூழைக்கும்பிடு போடும், அது இல்லையெனும்போது ஒரே நொடியில் கழுத்தைப்பிடிக்கும் காவல் துறை, காதல் மனசு சம்பந்தப்பட்டது என்று எம்மை கண்கலங்கி ஒத்துக்கொள்ள வைக்கும் சீதா, தம் வருங்கால வசதிகளை பெருக்குவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு அதற்கான வாய்ப்பு வரும்போது அதை நேக்காக பயன் படுத்திக்கொள்ளும் குடும்பம் என்று பல சுவாரசியங்கள் இந்த நாவலில். 

பிராமண குலத்தில் பிறந்தும் அவர்களைப்பற்றியே கிண்டல் அடித்து எழுதும் தைரியம் நிறைய பேருக்கு வராது. அதிலும் முக்கியமா "ஒரு லெவலுக்கு மேல பணமிருந்தா ஜாதிங்கறதுக்கு அர்த்தமேயில்லாம போயிரும்" என்ற வரி, சாதிக்கும் பணத்துக்கும் இடையிலான தொடர்பை பட்டென்று போட்டிலடித்தாட் போல் சொல்லியிருப்பார். 


என்ன தான் கதையில் கதாநாயகிக்கு தெளிவை கொண்டுவருபவராய் வந்தாலும் சாமியாரிணி ஆனந்தா பாத்திரம் அனாவசிய திணிப்பாக தனித்து தெரிகிறது. அனிதாவின் காதல்கள் என்று பெயர் வைத்து விட்டதாலேயே அவருக்கு நாலைந்து காதல்களையாவது(அனிதா அவர்களில் ஒருவரையுமே கடைசிவரை காதலிக்கவில்லை என்பது வேறு விடயம்) காட்டிவிட வேண்டுமென்ற கட்டாயத்தில் மல்லிகா மற்றும் அவரது அண்ணனான விசுவையும் கதையில் புகுத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. மேலும் அவர்கள் கதையின் ட்விஸ்ட்டிற்கோ சுவாரசியத்திற்கோ எங்குமே உதவவில்லை என்பதால் அவர்களை தவிர்த்திருந்தால் கூட கதை நன்றாகவே அமைந்திருக்கக் கூடும்.


கொஞ்சம் பிசகியிருந்தாலும் ரமணிச்சந்திரனின் மென்காதல் கதைகளின் சாயல் வந்திருக்கும். ஆனாலும் தனது சுவாரசியமான எழுத்து நடையாலும் வேகமான சம்பவக்கோர்வைகளாலும் எம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறார் எழுத்தாளர் சுஜாதா. ஒரு பெரிய எழுத்தாளரின் நாவலை விமரிசிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லாவிட்டாலும் கூட இந்த நாவலைப்பற்றிய என் கருத்தை பகிரவே இங்கு பதிவிடுகின்றேன். 

அனிதாவின் காதல்கள், ஒரு அழகான திரைப்படம் பார்த்த திருப்தி கடைசியில். 

Tuesday, July 12, 2011

நயன்தாரா இளைத்தது எப்படி?

இப்படி ஒரு அறிவு பூர்வமான பதிவை எழுதவேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆசை. நாங்களும் அறிவார்த்தமா எழுதுவோமுல்ல..அப்போ
இப்போ 
செம்மை கட்டை என்று கூறும்போது உங்களுக்கு யாரை ஞாபகத்துக்கு வரும்? பக்கத்து வீட்டு ரமணி ஆண்டியும் நயன்தாராவும் தான். முன்ன லாம் ட்ரம்முக்கு சேலைய சுத்தி விட்ட மாதிரி தொப்பையோட மரத்த சுத்தி பாட்டு பாடும் எங்க நயன்தாரா.ஆனா இப்போ செம்மை கட்டை அது. 
பொதுவாவே தமிழ் சினிமாவுல என்ட்ரி குடுக்கும்போது சிறுத்த குட்டிங்களா இருக்குற நடிகைங்க எல்லாமே கொஞ்சம் காலம் போனதுமே பெருத்த குட்டிங்களா ஆகுரதுதான் வழக்கம். அதோட சினிமா உலகம் அவங்கள புல்டோசர் வைச்சு குண்டுக்கட்டா தூக்கி வெளிய போட்டுரும். 


ஆனா நயன்தாரா மட்டும் தான் ஷகீலா ஆண்டி சைஸ்ல வந்து இப்போ ஜில் ஜில் ஜிகிர் தண்டாவா ஸ்லிம் பிகர் ஆகிருக்காங்க. 


நான் என்ன பெருத்த குட்டியா?

தமிழ் ரசிகர்களுக்கு எப்போவுமே குஷ்பூ, ஜோதிகா, ரம்பான்னு நல்ல கொழுக் மொழுக்குன்னு ஓவர் சைஸ்ல இருக்கற நடிகைங்கள தான் புடிக்கும்.

ஆனாலும் எவ்வளவு அழகா இருந்தாலும் சீனியர் நடிகருங்களுக்கு ஜோடிபோட்டதால நயனை ஆன்ட்டினு கொஞ்ச காலம் ஒதுக்கியே வைச்சுருந்தாங்க. அவங்க ஸ்லிம் ஆகுனதுக்கப்புறம் தான் இளவட்டங்கள் எல்லாம் நயனுக்கு கோயில் கட்டி கும்புட ஆரம்பிச்சாங்க. 
என்ன அழகு, என்ன பிகரு, என்ன சிரிப்பு, என்ன நடிப்புன்னு எல்லா விதமான ரசிகர்கள கவர்ந்தாங்க. முறைச்சாலும் சிரிச்சாலும் சூப்பர் தான்..கண்கள் மலர்ந்து சிரிக்குற அழகே அழகு(ஜொள்ளு.. ஸ்டாப்பு). 

ஆனா அவங்க ஆயில் மேக்-அப்புலயும் எல்லா படத்துலயும் ஒரே மாதிரி தலையலங்காரத்துலயும்( அதாம்பா ஹேர் ஸ்டைல்) வரும்போது தான் கடுப்பா இருக்கு. நயன்தாரா பாட்டு போகும்போதெல்லாம் "இந்த பொண்ணு ஏன் எப்போ பாரு பாம்பு படம் எடுத்த மாதிரி தலை சீவுது" என்று அடிக்கடி எங்கம்மா கேட்பாங்க. அது நிஜம் தான். யாருப்பா நயன்தாரா அக்காவுக்கு(அக்காவா?...) தலை வாரி விடறது, நாக பாம்பு டான்ஸ் ஆடுற மாதிரி? 
கண்றாவி.. நா ஹேர் ஸ்டைல் ல சொன்னேன்.


என்னதான் இருந்தாலும் செல்லமே செல்லமேனு தொடை தெரிய விஷால் கூடவும் ஜல்சானு விஜய் கூடவும் கெட்ட ஆட்டம் போடுற நயன விட ஒரு வார்த்தை பேச ஒரு நிமிஷம்னு மங்களகரமா ஓடி வந்த நயன்ன தான் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு. 

இனிமே அவங்க படத்துல நடிக்கமாட்டாங்க அப்புடிங்கறது எங்கள மாதிரி ரசிகர்களுக்கு துக்க செய்தி தான். சிம்ரன் போகும்போது எங்களை காக்க நயன் வந்தாங்க. நயன் போகும்போது யாரு வரப்போறா? அந்த தேவதைய சீக்கிரம் எங்க கண்ணுல காட்டு சாமி....(அதுக்கு தான் ஹன்சி குட்டிய அனுப்பிருக்கேன் பக்தர்களே)========================================================================

யோவ், தலைப்புக்கும் நீ இவ்ளோ நேரம் போட்ட மொக்கைக்கும் என்னைய்யா சம்பந்தம்? கடைசி வரைக்கும் நயன்தாரா இளைத்தது எப்படின்னு சொல்லவே இல்லையேனு கேட்குறீங்களா? என்கிட்ட்ட கேட்டா, எனக்கு எப்புடிங்க தெரியும்? சிம்பு அல்லது பிரபுதேவா கிட்ட போய் கேளுங்கப்பு...

Saturday, July 9, 2011

ஓத்தால கடவுளுக்கு காட்டுபூச்சி எழுதுற கடுதாசி..

(கடவுள் மேல மரியாதை இருக்க கம்முனாட்டிங்க எல்லாம் ஓடி போயிருங்க. அப்புறம் இந்த மாதிரிலாம் காட்டுபூச்சி எழுதுதேன்னு complaint பண்ணகூடாது)
ஓத்தால கடவுளுக்கு,

யோவ், ரொம்ப நாளாவே உனக்கு ஒரு கடுதாசி எழுதி போடணும்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். இன்னிக்கு தான் நேரம் கெடைச்சுது.

நான் ஒன்னும் உலக பிரச்சினைய பத்தியெல்லாம் கேட்டு என் இப்படியெல்லாம் நடக்குது, நீ என்ன செரைச்சுகிட்டா இருக்க அங்கேன்னு கேட்க இந்த கடுதாசி எழுதல. அப்புடி நா கேட்டு நீ இதயம் உடைஞ்சு போய் (அதாம்பா Heart Broken) தண்ணிய அடிச்சுட்டு குப்புற கவுந்துட்டா இங்க உள்ள நாதாரிப்பய எல்லாம் என்னால தான் ஊர்ல மழை பெய்ய மாட்டேங்குதுன்னு காண்டாகி என்ன வைச்சு கும்மிருவானுங்க. பத்தாததுக்கு இந்த பதிவர்களெல்லாம் "காட்டுபூச்சி எழுதுன கடுதாசியும் காண்டாகுன கடவுளும்" னு பதிவைப்போட்டு என்ன கிழி கிழி ன்னு கிழிப்பங்க.தேவையா இதெல்லாம் எனக்கு?

அப்புறம் என்ன ......... க்கு எனக்கு கடுதாசி போடுற, நான் நல்லா இருக்கியானு தெரிஞ்சுக்கவான்னு நீ கேட்கலாம். நீ நல்ல இருக்கியா இல்லையாங்கறத பத்தியெல்லாம் எனக்கு ஒரு மயித்து அளவுக்கு கூட அக்கறை இல்ல. என்ன பத்தியும் கேட்டு தெரிஞ்சுக்க உனக்கு இஷ்டம் இருக்காது. அப்டி கொஞ்சமாவது இருந்தா உன்னோட மூணாவது கண்ணை வைச்சு தேடி தெரிஞ்சுக்க. முக்காலமும் தெரியுமாம்ல உனக்கு. 

இங்க வடிவேலு படம் எதுக்கு?
அப்புடி தெரியலேன்னா நானே சொல்றேன். நான் நல்லாவே இல்லைய்யா. நல்லாவே இல்ல. முன்ன லாம் உன்கிட்ட தான் பினாத்திக்கிட்டு இருப்பேன் ஏன்டா என்னை இப்புடி சோதிக்குறன்னு. கிட்ட தட்ட ஐஞ்சு வருஷம், என்னை வைச்சு காமெடி பண்ணுன. பொறுத்துகிட்டேன். 


இந்த மேட்டர் ல எல்லாம் பேதமே இல்ல. சீட் கெடைக்காத வேட்பாளன் எல்லா கட்சி வாசல்லயும் போய் எவனாவது ஒருத்தன் சீட்ட குடுத்துர மாட்டானா னு நிக்கற மாதிரி எல்லா மத கோயில், சர்ச்சு, பள்ளிவாசல்லையும் போய் நின்னுருக்கேன், உன்கிட்ட சொல்லி என் கவலைய தீர்த்துக்க தான், பின்ன என்ன பிரசாதம் திங்கவா ..ங்கொய்யா? 

ஆனா கடைசி வரைக்கும் நீ தலைய மட்டும் ஆட்டிக்கிட்டு கேட்டுகிட்டு தான் இருந்த. வேற ஒரு ஆணியையும் புடுங்கல. நான் ஒன்னும் சும்மாவே உட்கார்ந்துகிட்டு எனக்கு அத குடு, இத குடுன்னு கேட்கல. நான் கஷ்டப்பட்டு பண்ணுறத, நீ பாட்டுக்கும் எதையாவது செய்ஞ்சு கெடுத்துறாத அப்புடீன்னு தான் உன்கிட்ட கேட்டேன்.

ஆனா நீ என்னோட எல்லா முயற்சிக்கும் வைச்ச ஆப்பு. சின்ன ஆப்பு இல்ல புடுங்கி போட்டு போறதுக்கு. பெரிய புல்டோசர் சைஸ் ல வைச்ச. பத்தாததுக்கு நீ வைச்ச ஆப்ப கவனிக்காம நா போய் அது மேலே உட்கார்ந்து பின்னாடி வேற புண்ணாகி போச்சு. பாருய்யா பாரு.. நல்லா பாரு...

பாருய்யா பாரு.. நல்லா பாரு...


இதுக்கு மேலயும் நா அப்பு வாங்க (பின்னாடி புண்ணாக்கிக்க) ரெடியா இல்ல. So நான் உன்ன வெலக்கி வைக்கறேன். I mean உன்ன divorce பண்ணறேன். இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இனி நீ என் வாழ்க்கைல தலையிடாத. இனி நா வாங்குற ஆப்புக்கேல்லாம் நா மட்டுமே காரணம். இதுக்காக நீ என்கிட்டே ஜீவனாம்சம் அது இதுன்னு கேட்ட னு வைச்சுக்கோ, உங்காத்தா கிட்ட நீ குடிச்ச பால் எல்லாம் ரெத்தமா வெளிய வந்துரும். ஓடி போயிரு. 

இப்படிக்கு 
ஆப்பு வாங்கி வாங்கியே கடுப்பான "காட்டுபூச்சி"


பி.கு: இதற்கும் வடிவேலுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சும்மா லுலுலாய்க்கு அவர் படம் சேர்க்கப்பட்டது. மெய்யாலுமே...

=======================================================================
நன்றி : ஓத்தால என்ற வார்த்தையை எனக்கு அறிமுகப்படுத்திய பதிவாளர் ஜாக்கி சேகருக்கு


தமிழில் தட்டச்சு செய்ய..

கடந்த சில நாட்களாக என் வலைத்தளத்தில் இருந்த தமிழ் மொழி பெயர்ப்பு தொழில் நுட்ப உதவியைக் காணவில்லை. தேடிப்பார்த்த பொது கூகுள் வழங்கும் வேறொரு மென்பொருளே காணக்கிடைத்தது. கூகுள் மென்பொருளான Google Transliteration IME ஐ தரவிறக்கம் செய்யுங்கள். மறக்காமல் மொழிபெயர்க்கும் மொழியாக தமிழை தெரிவு செய்யுங்கள்.
http://www.google.com/ime/transliteration/


கூகுள் தளத்திலேயே மொழிபெயர்க்க.
http://www.google.com/transliterate/indic/Tamil

Wednesday, June 15, 2011

என்னை பாதித்த வெள்ளித்திரை இயக்குனர்கள் - Part 2ஒரு சிறந்த திரைப்படத்தை படைக்க, 100 படங்களில் உதவி இயக்குனராகவோ சிறந்த ஒரு இயக்குனரின் உதவியாளராகவோ இன்னும் 10 படங்களை தானே இயக்கி பாடம் கற்றுக்கொண்ட அனுபவ சாலியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. முதல் முயற்சியிலேயே முத்தான திரைப்படங்களை கொடுத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இன்றைய காலத்தில் யாரையுமே குறைத்து மதிப்பிட முடியாது.அறிமுக இயக்குனர்கள் கூட பெரிய நடிகர்கள் , தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமலேயே கதையை மட்டும் நம்பி பெரிய இயக்குனர்களே தொடப் பயப்படும் விடயங்களைப்பற்றி அவர்களே சிலாகித்துப்பாராட்டும் வகையில் மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்குகிறார்கள்.  இவர்களில் சமுத்திரகனி , சசிகுமார் , வெற்றிமாறன்,சசி, ராதா மோகன், விஜய் , எ. சற்குணம், சுசீந்திரன், மிஷ்கின், பாண்டிராஜ், அறிவழகன், S.P.ஜனநாதன், (வேதம்-வானம்) கிருஷ் ஆகியவர்களை குரிப்பிட்டுசொல்ள்ளலாம்.


கிருஷ் (Krish Jagarlamudi)


புதிய இயக்குனர்கள் மத்தியில் commercial திரைப்படத்தின் வாயிலாக நல்ல கருத்துக்களையும் சொல்லமுடியும் என்று நிரூபித்த ஒரு இயக்குனர் தான் கிருஷ். மனிதர்களின் ஆசைகள் பலவகைப்பட்டது. மனித மனம் ஆசைகளுக்கு அடிமையாகும்போது எத்தகைய கொடூரத்தையும் செய்ய அச்சப்படுவதே இல்லை. இதனால் மனிதத்தை தொலைத்து விட்டு மிருகமாக திரிபவர்கள் இவ்வுலகில் எத்தனையோ பேர். இத்தகைய மனிதர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படம்பிடித்திருப்பது மட்டுமல்லாது, அவர்கள் எப்படியான ஒரு தருணத்தில் மனம் திருந்தி மறுபடி மனிதனாக மாறுகின்றார்கள் என்பதை உணர்ச்சிகரமான காட்டியுள்ள திரைப்படமே "வானம்".Krish Jagarlamudi

மனிதத்தைப்பற்றிய ஒரு அருமையான திரைப்படம் அதுவும் கலைத் திரைபடங்களைப்போல் பாடம் எடுத்து அலுக்க வைக்காமல் இன்றைய இளைஞர்கள் விரும்பும்வகையில் ஆடல் பாடல் அனைத்தும் அடங்கிய ஒரு commercial குருமாவாக. 

அதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரின் நடிப்பும் அவர்களின் பாத்திர வார்ப்பும் அதே போல் சிறப்பாக அமைந்துள்ளது. அதிலும் முக்கியமாக சிம்புவின் கதாபாத்திரம். படித்த இளைஞனாக இருந்த போதும் காதலுக்காக , காதலிக்காக , தெருவில் பெண்களின் கழுத்து சங்கிலியை அறுப்பது கூட தவறு இல்லை என்று திருடப்புறப்படும் சிம்பு, மகனின் படிப்புக்காக தன் சிறுநீரகத்தை விற்று பணம் வாங்கும் பெண்ணிடமிருந்து பணத்தைப் பிடுங்கும்போதும் ஒரு கணப் பொழுது அந்த குடும்பத்தின் ஓலம் மறுபடி காதில் ஒழிக்க மனம்திருந்தி அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் நேரத்திலும் வெளிப்படுத்தும் நடிப்பு அபாரம். இவ்வளவு நடிப்புத்திறனை வைத்துக்கொண்டு விரல் வித்தையை மட்டும் வைத்து இவ்வளவு நாளும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியதும் ஏனோ? 

அதிகமான பாத்திர முக்கியத்துவமோ காட்சிகளோ அதிகம் இல்லையென்றாலும் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டு கிடைத்த இடத்திலெல்லாம் வெளுத்துக்கட்டியிருக்கும் அனுஷ்கா. இந்த கதா பாத்திரத்திற்கு அனுஷ்
வானம் 
கா மிகச்சிறந்த தேர்வு. அருமையாக நடிக்கக்கூடிய ஒரு நடிகையை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒட்டகச்சிவிங்கி போல் பாடல் காட்சிகளிலெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வைத்தும் கதா நாயகனுக்கு நடனமாட மட்டும் துணையாக நிற்க வைக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் ஒரு முன்னணி நடிகையை எந்த அளவுக்கு ஒரு கதா பாத்திரமாக வாழ வைக்கலாம் என்ற கலை க்ரிஷிற்கு தெளிவாக தெரிந்து இருக்கிறது. 

விலை மாதாக வாழும் ஒரு பெண்ணாக இருந்தாலும் உலகின் மிகச்சிறந்த குணங்களெல்லாம் ஒருங்கே கொண்டு திருந்தி வாழ ஒரு வாய்ப்பை மட்டும் எதிர் பார்த்து (அதுவும் கதா நாயகன் மூலமாக) காத்திருக்கும் பெண்களாக அல்லது பிறரை வைத்து தொழில் நடத்தும் கொடூரமான பெண்ணாக மட்டுமே தமிழ் சினிமாவில் இது வரை விலை மாது பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் வானத்தில் ஒரு வித்தியாசமான விலை மாது பாத்திரப் படைப்பு. உடலை விற்பது கூட ஒரு தொழில் தான் என்று மனதார ஏற்றுக்கொண்டு அதனை இழிவாக எண்ணாது செய்யும் ஒரு பெண், ஒருவன் திருமணம் செய்து குடும்ப வாழ்வுக்கு வழி காட்ட நினைக்கும்போதும் அதைத் துச்சமாக கருதி உதறி விட்டு, உடலை விற்பதாயினும் அதை சொந்த companyயின் மூலம் செய்ய நினைக்கும் ஒரு பெண். லஞ்சம் வாங்கும் காவலதிகாரியிடம் "நாங்க dress அ அவுத்துட்டு விலை போறோம். நீங்க dress அ மாட்டிக்கிட்டு விலை போறீங்க. உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்?" என்று பொங்கும்போதும் தனது நண்பியான கற்பூரத்திற்கு மருத்துவ சிகிச்சை செய்ய மறுக்கும் மருத்துவரிடம் அதற்காக அவரிடம் எத்தனை தடவை வேண்டுமானாலும் படுப்பதாக கெஞ்சும்போதும் எமது கண்களில் கண்ணீரை வரவைக்கிறார். இவரை இதற்கு பின்பாவது நடிப்பை வெளிப்படுத்தும் கதா பாத்திரங்களில் பார்க்க ஆசை. 

தெலுங்கில் கிருஷ் இயக்கிய வேதம் என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கமான வானம் நிறைய தமிழ் ரசிகர்களின் உணர்வுகளை தூண்டி இருக்கிறது. தெலுங்கு தேசத்தவராயினும் தமிழ் நாட்டிற்கு ஒரு சிறந்த பரிசாக கிடைத்திருக்கிறார் கிருஷ். முதல் படத்திலேயே தன் திறமையை சரிவர நிரூபித்து இருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் வருங்காலத்தில் மென்மேலும் கூடுமே தவிர குறையாது. அதனால் சிறந்த திரைப்படங்களை என்றுமே வரவேற்கும் ரசிகர்களை ஏமாற்றாது இனிமேலும் சிறந்த திரைப்படங்களை இயக்க எங்களின் வாழ்த்துக்கள். 


தொடர்ந்து எழுதுவேன்... 


Tuesday, June 14, 2011

என்னை பாதித்த வெள்ளித்திரை இயக்குனர்கள் - Part 1


ஒரு திரைப்படம் எவ்வாறு உருவாகின்றது? நடிகர்களின் திறமையான நடிப்பும் இயக்குனரின் வழிகாட்டலுடன் கூடிய பாத்திரச் செதுக்கலும், திரைக்கதை, பாடலாசிரியர்களின் கற்பனை வளமும், இசையமைப்பாளரின் தனித்துவமான பங்களிப்பும், தயாரிப்பாளர் , விநியோகஸ்தர்கள், மூலதனம் இடும் முதலாளிகள், தணிக்கைக்குழு, படத்தை வெட்டி ஓட்டும் தையல்காரர்கள்(Editors), முகத்திற்கு மட்டுமன்றி படத்திற்கே முலாமிடும் ஒப்பனைக்கலைஞர்கள், நிழலை நிஜமாகக்காட்ட உதவும் தொழில் நுட்பக்கலைஞர்கள் , சண்டைப்பயிற்சி வல்லுனர்கள் மட்டுமன்றி இன்னும் எத்தனையோ தொழிலாளர்களின் கடின உழைப்புடன் உருவாக்கப்படுகின்றது. சினிமா சுவரொட்டி ஓட்டும் சிறுவன் கூட ஒருவகையில் தன பங்களிப்பை செய்கின்றான். 

மூன்று மணித்தியால திரைப்படத்திற்கு மூன்று வருடங்களைக்கூட செலவழித்து திரைப்படங்களை தயாரிக்கின்றார்கள். மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டது போல இது கனவுகளை நிஜத்தில் உயிர் கொடுத்து நடமாடவிடும் கனவுத்தொழிற்சாலை தான் சினிமா. ஒரு படம் வெற்றி பெரும் போது அதற்காக பாடுபட்ட அத்தனைபேரையும் நினைவு கூறும் நாம் தோல்வியுறும்போது அதற்கான முழுக்காரணமாக அத்திரைப்படத்தின் முன்னணி நடிகரையோஅல்லது இயக்குனரையோ சுட்டிக்காட்டி விட்டு மறந்து போகின்றோம். 

இது சரியா, பிழையா என்று ஆராய்ச்சி செய்வதை விட ஒரு திரைப்படத்தில் இந்த இயக்குனரின் பங்கு என்ன என்று பார்ப்போம். ஒரு சிலை வடிக்க ஒரு சிற்பி எத்தகைய பங்கு ஆற்றுகின்றானோ அதுவே ஒரு திரைப்படத்தில் இயக்குனரின் பங்காகும். எழுபதுகளில் சினிமாவில் இயக்குனர்கள் கொடிகட்டிப்பறந்தனர். இயக்குனர் சிகரம் பாரதிராஜாவால் அறிமுகம் ஆகுவதற்காக நடிகர்களும் நடிகர்களும் முண்டியடித்த காலம் அது. இயக்குனர் இமயம் பாலச்சந்தர் அவர்களின் மோதிரக்கையினால் குட்டுப்பட வரிசையில் நின்ற காலம் அது. திரைப்படங்களின் ஆணி வேரான இயக்குனர்களை நம்பி திரைப்படங்கள் வெளி வந்த காலம் அது. ஆனால் இன்று?முன்னணி கதா நாயகர்களை ஒப்பந்தம் செய்ய பணப்பெட்டியுடன் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களின் வீட்டு வாசலில் காத்து நிற்கும் அவலம். ஆந்திராவிலிருந்தும் மும்பாயிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் நடிகைகளுக்கும் அவர்களின் தாய்க்குலங்களுக்கும் மட்டுமன்றி அவர்களின் செல்ல நாய்க்குட்டிகளுக்கும் கூட உதவி இயக்குனர்கள் குடை பிடித்து பணிவிடை செய்யும் கொடுமை எல்லாம் கூட இன்று நடக்கிறது. கதைக்காக நடிகர்களை தெரிவு செய்தது போக நடிகர்களுக்காக கதை எழுதப்படுகிறது. அவர்களுக்காக கதையும் இயக்குனர்களும்கூட மாற்றப்படுகின்றனர். 

இன்று நடிகர்களுக்காக படம் பார்க்கும் கூட்டம் தான் திரையரங்குகளில் நிறைந்து இருக்கின்றது. தனக்கு பிடித்தமான நடிகரை தலைவராக எண்ணி பாலாபிஷேகம் செய்வதும் பட்டாசு வெடிப்பதும், அவர்களுக்காக உயிர் மாய்த்துக்கொள்வதும் கூட நடக்கிறது. அவர்களை விட இந்த (மூட) ரசிகர்களை குறிவைத்து சின்னத்திரை அலைவரிசைகள் கூட தங்கள் கல்லாப் பெட்டிகளை நிரப்பிக்கொள்வது வேதனைக்குரிய விடயம். இலங்கையில் அண்மையில் ஒரு தமிழ் தொலைகாட்சி SMS மூலமான வாக்கெடுப்பிற்காக கடந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தெரிவுகளில் மதராசப்பட்டினம் ஆர்யாவை புறக்கணித்து விட்டு "சுறா" என்னும் உலகப்புகழ் பெற்ற திரைக்காவியத்துக்காக அத்திரைப்படத்தின் கதா நாயகனை இணைத்து SMS மூலமாக வாக்களிக்குமாறு பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை கூவிக்கூவி விளம்பரம் செய்கிறது. ("சிறந்த" என்பதற்கும் "பிடித்தமான" என்பதற்கும் வித்தியாசம் தெரியாத இதே தொலைகாட்சி கடந்த வருடம் வேட்டைக்காரனுக்காக அதே நடிகருக்கு விருது கொடுத்து கௌரவித்தது வேறு விடயம்). 

நான் ஒன்றும் commercial சினிமாவிற்கு எதிரியல்ல. தமிழ் சினிமாவில் என்னைப்பாதித்த திரைப்படங்கள் நிறையவே உள்ளன. அதில் commercial சினிமாக்களும் உள்ளடக்கம். ஒரு திரைப்படத்தை பார்த்து முடிக்கும்போது அந்த திரைப்படத்தை பார்க்க முன்பான மனோநிலையை அத்திரைப்படம் சிறிதாவது மாற்றியிருக்க வேண்டும். அதாவது பார்வையாளனின் மனதில் அத்திரைப்படம் மன அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும் இல்லையெனில் அதை ஒரு சிறந்த படமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வகையில் ஒரு சில குறிப்பிட்ட இயக்குனர்களின் திரைப்படங்கள் நிறையவே என்னை பாதித்திருக்கின்றன. 


இயக்குனர் மகேந்திரன் (Director Mahendran)


Director Mahendran with Rajini Kanth in Mullum Malarum shooting set.


தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மகேந்திரனின் "உதிரிப்பூக்கள்" திரைப்படம் அவ்வாறான ஒரு திரைப்படம்.  சிக்குப்படிந்த முடியுடனும் சந்திரமுகியின் சகோதரனைப்போல் கண்ணை உருட்டிக்கொண்டு ஆ.. ஊ.. என்று படத்தின் முடிவுவரை கத்திக்கொண்டே இருக்கும் ஆந்திர வில்லன்களும்(வில்லிகளும்) கவனிக்க. அந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது வில்லனாக நடித்த விஜயனின் நடிப்பு. அமைதியாக இருந்து கொண்டே ஒருவர் எப்படி ஒரு கிராமத்தையே கெடுக்க முடியும் என்பதற்கு அவரின் நடிப்பும் பாத்திர வார்ப்பும் ஒரு எடுத்துக்காட்டு. கொடுமையான மனவக்கிரம் பிடித்த ஒரு பெரிய மனிதனுக்கு அடிக்காமல் வலிக்க வைக்காமல் இரத்த களரியான வன்முறையின்றி எப்படி பாடம் புகட்டுவது என்பதை இறுதிக்காட்சியின் மூலம் இயக்குனர் மகேந்திரன் அருமையாக உணர்த்தியுள்ளார். இத்திரைப்படம் இன்றும் பல புதிய இயக்குனர்களுக்கு ஒரு சிறந்த திரைப்படத்திற்கான முன்னுதாரணமாக விளங்குகிறது. 

உதிரி பூக்கள் 
உதிரி பூக்கள்


ரஜினியை வைத்து இயக்கிய முள்ளும் மலரும் இன்னொரு ஒப்பற்ற திரைப்படம். செம்மண் காட்டு கிராமங்களையும் புழுதியைக் கிளப்பிக் கொண்டு விரையும் ஜீப் வண்டிப் பிரயாணங்களையும் அழுத்தமான காட்சியமைப்புகளோடு கோர்த்து காட்டுவதில் இவர் வல்லவர். ஒரு கையை இழந்த பின்பு தன் இயலாமையை குறைவாக மதிப்பிட்டு தன்னை மதிக்காமல் தன் தங்கையை தன்னுடைய எதிரிக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்களோ, அதை தடுக்கும் சக்தியற்றவனாக மற்றவர்கள் தன்னை கருதி விடுவார்களோ என்ற பயத்துடன் வீண் ஜம்பம் பேசி திரியும் வித்தியாச ரஜினி. அவர் ஊனமாகிப்போன பரிதாபத்தை விட எதற்காக இப்படி தன் வெட்டி கௌரவத்திற்காக தங்கைக்கு கிடைக்கும் நல்ல வாழ்க்கையை கெடுக்கிறார் என்று ரஜினி மேலேயே எங்களுக்கு எரிச்சலை வரவழைப்பதில் தான் இயக்குனர் மகேந்திரனின் திறமை ஓங்கி நிற்கிறது. 

முள்ளும் மலரும் - ஷோபா


இவரால் இயக்கப்பட்ட ஒரு commercial திரைப்படம் தான் "ஜானி". நான் அதிக தடவை பார்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. பிராணிகளுடன் ஒன்றாக படுக்கையில் படுத்திருப்பதும், தோட்டத்தில் மலர்ந்துள்ள பூக்களைக்கூட எண்ணி வைத்து விட்டுப் போகும் மகா கஞ்சனாக ரஜினி. ரஜினியால் நடிக்க முடியாத பாத்திரங்களே இல்லை என்று உணர்த்தியதில் ரஜினியை விட இயக்குனர் மகேந்திரனின் பங்கே அதிகமானது. 

இவரின் மற்ற திரைப்படங்களை பார்க்கும் பாக்கியம் இன்னும் எனக்கு வைக்கவே இல்லை.

தொடர்ந்து எழுதுவேன்... 

Tuesday, May 31, 2011

இவர்களுக்கு பாவம் பார்க்கலாமா?

கலைஞர் கருணாநிதி குடும்பம் - Kalaignar Karunanidhi's Family Tree

இந்த விவகாரமான விபரப்பட்டியல் எனக்கு மின் அஞ்சலில் (E-mail) கிடைக்கப்பெற்றது. எதன் அடிப்படையில் இது தொகுக்கப்பட்டது மற்றது இதன் உண்மை நிலை பற்றிய தகவல்கள் தெளிவாகத்தெரியாத போதும் இது உண்மையாக இருப்பின் தமிழக மக்கள் கடந்த தேர்தலின் மூலம் வெளிக்காட்டிய முடிவு எவ்வளவு சரியானது என உங்களை சிறிதளவேனும் சிந்திக்க வைக்கும் என்ற நோக்கில் இத்தகவலை வெளியிடுகின்றேன். 


கனிமொழி கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டதும், பலர்
மகிழ்ந்தாலும், சிலர் வருந்தவே செய்தார்கள். ஒரு சிலர், கனிமொழி பாவம்
என்றார்கள். மற்றும் சிலர், கருணாநிதிக்கு இந்த முதிர்ந்த வயதில், எத்தனை
துன்பம் என்றார்கள்.இவர்களுக்கு பாவம் பார்க்கலாமா.... ?கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பட்டியல், சவுக்கு விசாரித்து சேகரித்த
பட்டியல். இது முழுமையான பட்டியல் அல்ல.   இவை வெறும் அசையா சொத்துக்கள்.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம்
இதில் சேர்க்கப் படவில்லை.

1.    
கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி.2.    
முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி3.    
முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி4.    
சொர்ணம் பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி5.    
மு..முத்து பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு ரூ.2 கோடி6.    
அமிர்தத்தின் வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.5 கோடி7.    
செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.8.    
சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர
அடி கட்டிடம் மதிப்பு 5 கோடி.9.    
மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள்
மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.10.    
ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி11.  
மு..ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 .அடி நிலம்.
2917
.அடி கட்டிடம். மதிப்பு 2 கோடி.12.  
உதயநிதியின் ஸ்னோ பவுலிங், நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.13.  
கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.14.  
கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.15.  
ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி.16.  
கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசு
நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.17.  
சன் கேபிள் விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம் 2 கிரவுண்ட் நிலம்
மற்றும் உபகரணங்கள். 5 கோடி.18.    
சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.19.  
கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.20.  
பெங்களுரில் செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4 கோடி.21.    
பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர் பண்ணை
வீடு. மதிப்பு 80 கோடி.22.  
மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.23.  
பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.24.    
மு..தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.

25.  
மு..தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள்.   மதிப்பு 30 லட்சம்.26.  
சன் டிவியின் டெல்லி அலுவலகம்.   மதிப்பு 50 கோடி.27.  
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)28.  
தினகரன் பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)29.  
சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)30.  
முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)31.  
ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய்
விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ்
சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து
வாங்கப் பட்டது. இதை வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதி
மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.32.  
தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம்
கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்33.  
தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர்
நிலம், கருணாநிதி பெயரில்.34.  
தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம்
மதிப்பு 1 கோடி.35.  
துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர்
மாவட்டத்தில் 3680 .அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.36.    
மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி
பெயரில் மதிப்பு 2 கோடி.37.  
மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம்
மதிப்பு 2 கோடி.38.  
மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி.39.  
மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம்
அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.40.  
மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.41.    
மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி
பெயரில். மதிப்பு 1 கோடி.42.  
மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி
பெயரில் மதிப்பு 2 கோடி.43.  
மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு.
மதிப்பு 2 கோடி.44.  
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்தி
அழகிரி பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.45.  
மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில்
5.32
ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.

46.    
மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம்,
தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.47.  
மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர்
நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.48.  
கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு
கூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி.49.    
தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட்
நிலம். மதிப்பு 50 லட்சம்.50.  
சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி
நிலம். மதிப்பு 2.5 கோடி.51.  
சென்னை திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி
நிலம். மதிப்பு 3 கோடி.52.  
காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய சாய் நகரில்
திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.53.  
சென்னை மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்தி
அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.54.  
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை
வீடு மதிப்பு 2 கோடி.55.  
மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.56.  
மதுரை மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர்
பார்க் (8 மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.57.  
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.58.    
சென்னை, அண்ணா சாலை, கதவு எண் 271-A என்ற முகவரியில் 5 கோடி
மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.59.  
வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.60.  
கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு, குறைந்த பட்சம் 30 கோடி.61.  
ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.உறுதி செய்யப் படாத சொத்துக்கள்62.    
அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.63.  
கூர்க் பகுதியில் காபித் தோட்டம்.64.  
தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.

65.  
எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக 2 விமானங்கள்.66.  
மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும்
மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.67.  
சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம்
அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம், மருத்துவமனையாக மாற்றப்
பட்டு, மாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.68.  
கோயம்பத்தூர், ப்ரூக்பாண்ட் சாலை, ப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள
ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம், கனிமொழிக்குச் சொந்தமானது என்று
கூறப்படுகிறது.இப்போது சொல்லுங்கள்....... இவர்களுக்குப் பாவம் பார்க்கலாமா ?


கலைஞர் கருணாநிதி குடும்பம் - Kalaignar Karunanidhi's Family